மாணவ-மாணவிகளுக்கு கோடைகால பயிற்சி முகாம்


மாணவ-மாணவிகளுக்கு கோடைகால பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 22 April 2023 12:15 AM IST (Updated: 22 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.எம்.எஸ். அகாடமி சார்பில் ஒன்று முதல் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கோடைகால பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது.

சிவகங்கை

சிங்கம்புணரி

ஆர்.எம்.எஸ். அகாடமி சார்பில் ஒன்று முதல் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கோடைகால பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது. முகாமை ஆர்.எம்.எஸ். மருத்துவமனை தலைமை மருத்துவர் சின்னையா தொடங்கி வைத்தார். மாணவ-மாணவிகளின் அனைத்து திறமைகளையும் வெளிக்கொணறும் பொருட்டு குறைந்தபட்ச கட்டணத்தில் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு கோடை கால பயிற்சிகள் வழங்க இருப்பதாக அகாடமி ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி ராஜ்குமார் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், கோடைகால பயிற்சியில் கர்நாடக இசை, சதுரங்கம், ஸ்போக்கன் இங்கிலீஷ், வேதி கணிதம் (அபாக்கஸ்), ஓவியம், நடனம், களிமண் மற்றும் மண் பெருட்கள் சம்பந்தமான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் விடுமுறை நாட்களிலும் தங்களின் திறமைகளை வளர்த்து கொள்ளகின்றனர் என்றார். பயிற்சி நிறைவு நாளில் மாணவர்களுடன் பெற்றோர்களும் சேர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி ராஜ்குமார் தெரிவித்தார். சிங்கம்புணரி மற்றும் அருகில் உள்ள கிராம பகுதியில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் அகாடமியில் சேர்ந்து கோடைகால பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நிகழ்ச்சியில் தொழிலதிபர் மணிமாறன், சரவணன், மருத்துவர் ராஜ்குமார், அருள்மணி நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story