கோடைகால பயிற்சி முகாம்


கோடைகால பயிற்சி முகாம்
x

கோடைகால பயிற்சி முகாம் நடந்தது.

கரூர்

இனாம் கரூர் கிளை நூலகத்தில் கோடைகால பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி முகாமை கரூர் ஒன்றியம் இல்லம் தேடி கல்வி வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். நாடகக் கலை பற்றியும், நடிப்பது எப்படி, பார்வையாளர்களை கவர்வது எப்படி என்று நடித்துக் காட்டி பாவலர் கல்யாணசுந்தரம் பயிற்சி வழங்கினார். தொடர்ந்து கவிஞர்.காகம் ராஜா கவிதையின் வடிவங்கள் என்ன கவிதை எழுதுவது, எப்படி ஹைக்கூ கவிதை படைப்பது எப்படி என்று பயிற்சி அளித்தார். பயிற்சியின் முடிவில் ஹைக்கூ கவிதை போட்டி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. சிறந்த ஹைக்கூ கவிதை எழுதிய மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.

முடிவில் இனாம் கரூர் கிளை நூலகர் மோகனசுந்தரம் நன்றி கூறினார். தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டுகள், ஓவிய பயிற்சி, மனவளக்கலை பயிற்சி, ஒழுக்கம் மற்றும் பண்பாட்டுக் கல்வி, அடிப்படை கணினி பயிற்சி, தமிழ் வாசிப்பு பயிற்சி, தமிழ் நாப்பழக்க பயிற்சி வழங்கப்பட உள்ளது. வாசகர்கள், குழந்தைகள், இல்லம் தேடிக் கல்வி மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


Next Story