கோடைகால பயிற்சி முகாம் தொடக்கம்
கோடைகால பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
கரூர்
கரூர் மாவட்ட மைய நூலகத்தில் நேற்று கோடை கால பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு கரூர் மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் தலைமை தாங்கினார். வாசகர் வட்ட தலைவர் சங்கர் வரவேற்றார். கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் 100 மாணவ, மாணவிகளுக்கு நூலக உறுப்பினர் அட்டை மற்றும் 100 திருக்குறள் நூல்கள் வழங்கி, கோடைகால பயிற்சி முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, உதவி திட்ட அலுவலர் சக்திவேல் வாழ்த்துரை வழங்கினார். நாடக கலைஞர் கதைசொல்லி ஜெயராமன் கதையல்ல விதைகள் என்ற தலைப்பில் குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி, குழந்தை பாடல்கள் பாடி மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தினார். முடிவில் நூலகர் கார்த்திநிவாஸ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story