கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா


கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா
x

கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ராமநாதபுரம் வேலுமாணிக்கம் ஆக்கி விளையாட்டு மைதானத்தில் கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி துணைத்தலைவர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் இளைஞர் நல அலுவலர் தினேஷ் குமார் செய்திருந்தார். ஆக்கி பயிற்றுனர் மணிகண்டன் தலைமையில் கடந்த 15 நாட்களாக மாணவ-மாணவிகளுக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தன. இதன் அடிப்படையில் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது இதில் தடகளம், ஓட்டப்பந்தயம், குழு விளையாட்டுப் போட்டிகள், கைப்பந்து என பல பயிற்சிகளில் கலந்து கொண்ட 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


Related Tags :
Next Story