மாணவர்களுக்கு கோடை கால பயிற்சி முகாம் தொடக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் மாணவர்களுக்கு கோடை கால பயிற்சி முகாம் தொடங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் மாணவர்களுக்கு கோடை கால பயிற்சி முகாம் தொடங்கியது.
பயிற்சி முகாம்
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும் கோடைகால ஓவிய பயிற்சி முகாம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வி.பி.எம். எம். கல்லூரியில் தொடங்கியது. முகாமினை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். வி.பி.எம்.எம். கல்வி நிறுவனங்களின் துணை தாளாளர் துர்கா மீனலோச்சினி வரவேற்றார்.
தமிழ்நாட்டின் பல்வேறு சிறந்த ஓவியக்கலைஞர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கலைச்சுற்றுலா
குற்றாலம் சித்திரசபை, திருவிடைமருதூர், அம்பாசமுத்திரம், கிருஷ்ணாபுரம், வாசுதேவநல்லூர், பூலித்தேவர் அரண்மணை, கழுகுமலை முக்கால பாண்டியர் கோவில், மலையடிக்குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள ஓவியங்களை காண்பதற்காக கலைச் சுற்றுலாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், ஞானகவுரி, உதவி திட்ட அலுவலர் கணேஷ்குமார், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஓவிய ஆசிரியர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கனகலட்சுமி, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.