ரூ.19 லட்சத்திற்கு சூரியகாந்தி விதை ஏலம்


ரூ.19 லட்சத்திற்கு சூரியகாந்தி விதை ஏலம்
x
திருப்பூர்

வி மேட்டுப்பாளையம்

வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று வியாழக்கிழமை சூரியகாந்தி விதை ஏலம் நடைபெற்றது அதில் பூண்டிபாளையம் 16 புதூர் பல்லாநத்தம் வாகரை தட்டாரவலசு பகுதிகளைச் சேர்ந்த 43 விவசாயிகள்815 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர் காங்கேயம் முத்தூர் நடுப்பாளையம் பூனாட்சி சித்தோடு பகுதியைச் சேர்ந்த ஐந்து வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர் நல்ல தரமான சூரியகாந்தி விதைகள் ஒரு கிலோ 51.96 பைசாவிற்கும் இரண்டாம் தரமான சூரியகாந்தி விதைகள் 46.24 பைசாவிற்கும் ஏலம் எடுத்தனர் மொத்தம் 19 71732 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது



Next Story