சன்பீம் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் விளையாட்டு விழா


சன்பீம் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் விளையாட்டு விழா
x

வாலாஜா சன்பீம் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் வாலாஜாவில் உள்ள சன்பீம் இன்டர்நேஷனல் பள்ளியில் (சி.பி.எஸ்.இ.) ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.

ராணிப்பேட்டை

வாலாஜா

வாலாஜா சன்பீம் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் வாலாஜாவில் உள்ள சன்பீம் இன்டர்நேஷனல் பள்ளியில் (சி.பி.எஸ்.இ.) ஆண்டு விளையாட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது.

பிளஸ்-2 மாணவி ஹரிணி வரவேற்றார். 10-ம் வகுப்பு மாணவி அஸ்மிதா விளையாட்டு ஆண்டறிக்கையை வாசித்தார். விழாவுக்கு பள்ளியின் தலைவர் டாக்டர் ஹரிகோபாலன் தலைமை தாங்கி, முதன்மை விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து பேசினார். முதன்மை விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி வி.பாரதிதாசன் கலந்துகொண்டு பேசுகையில், இக்காலக்கட்டத்தில் மாணவர்கள் மீது கல்வி சுமை திணிக்கப்பட்டு விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. படிப்பு எவ்வளவு முக்கியமோ, விளையாட்டும் அவ்வளவு முக்கியம். விளையாடும் போது தான் ஒரு குழந்தையின் உடலும், மனமும் வலுப்பெரும் என்றார்.

மேலும் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து விளக்கி கூறினார். விழாவில் மாணவர்களின் சீருடை அணிவகுப்பு மரியாதையும், கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட 255 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், ஒட்டுமொத்த சாம்பியன்களான சி.பி.எஸ்.இ. பள்ளியின் காந்தி ஹவுஸ், நேரு ஹவுஸ் மற்றும் மெட்ரிக் பள்ளியின் எமரால்ட் ஹவுஸ்களுக்கு கேடயம் வழங்கினார். இதில் பள்ளியின் தாளாளர் தங்கபிரகாஷ், துணைத்தலைவர் டாக்டர் ஜார்ஜ்அரவிந்த், ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். சன்பீம் மெட்ரிக் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கோபிநாத்க்கு பள்ளியின் தலைவர் டாக்டர் ஹரிகோபாலன் ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கினார். முடிவில் பிளஸ்-2 மாணவர் முகமத்உவேஸ் நன்றி கூறினார்.


Next Story