தேனூர் வைகை ஆற்றில் இறங்கிய சுந்தரராஜ பெருமாள்
வைகாசி பெருந்திருவிழாவையொட்டி தேனூர் வைகை ஆற்றில் சுந்தரராஜபெருமாள் இறங்கினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சோழவந்தான்,
வைகாசி பெருந்திருவிழாவையொட்டி தேனூர் வைகை ஆற்றில் சுந்தரராஜபெருமாள் இறங்கினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வைகாசி பெருந்திருவிழா
சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தில் உள்ள சுந்தரராஜபெருமாள் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை சுந்தரராஜபெருமாள் குதிரை வாகனத்தில் கள்ளழகர் தோற்றத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு வீதிஉலா வந்தார்.
அப்போது வழிநெடுக கள்ளழகரை பக்தர்கள் வரவேற்று பூஜை செய்து வணங்கினார்கள். இதைத்தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். பரம்பரை தர்மகர்த்தா நெடுஞ்செழிய பாண்டியன், பொருளாளர் கவுதம்பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து வைகை ஆற்றில் உள்ள மண்டகப்படியில் கள்ளழகர் எழுந்தருளினார். நேற்று மாலை ஸ்ரீதேவி பூதேவியுடன் சுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கருட வாகனத்தில்...
மாலை வைகை ஆற்றில் வெளியூரை சேர்ந்த பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர்.இரவு பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இன்று(திங்கட்கிழமை) மாலை திருமஞ்சனமாகி, தேனூர் வைகை ஆற்றில் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளித்தல் நடைபெற உள்ளது. இன்று மாலை உள்ளூர் பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.
2 நாள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு புத்தாடை வழங்கப்படுகிறது.இரவு ராஜாங்க அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலிக்க உள்ளார்.இதையொட்டி பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறும்.நாளை(செவ்வாய்க்கிழமை) அதிகாலை வைகை ஆற்றில் இருந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் பல்லக்கில் அலங்காரமாகி வீதி உலா நடந்து சுவாமி ேகாவில் வந்து சேரும். சமயநல்லூர் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.