ரூ.6¼ லட்சத்திற்கு சூரியகாந்தி விதைகள் ஏலம்


ரூ.6¼ லட்சத்திற்கு சூரியகாந்தி விதைகள் ஏலம்
x

ரூ.6¼ லட்சத்திற்கு சூரியகாந்தி விதைகள் ஏலம்

திருப்பூர்

திருப்பூர்

வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று சூரியகாந்தி விதைகள் ஏலம் நடைபெற்றது. அதில் வெள்ளியனை, கல்பட்டி, தாராபுரம், பிச்சைகல்பட்டி மற்றும் கீரனூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 13 விவசாயிகள் 258 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியான காங்கயம், நடுப்பாளையம், பூனாச்சி, சித்தோடு, காரமடை மற்றும் கஸ்பாபேட்டை பகுதியை சேர்ந்த 8 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். குறைந்தபட்சமாக 47.11 ரூபாய் முதல் அதிகபட்சமாக 51.91 ரூபாய் வரை ஏலம் எடுத்தனர். 656 மூட்டைகள்(12,742 கி) எடையுள்ள சூரியகாந்தி விதைகள் சுமார் 6 லட்சத்து 32 ஆயிரத்து 590 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. இத்தகவலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளரான சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.


Next Story