சொரிமுத்து அய்யனார் கோவிலில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
விக்கிரமசிங்கபுரம்:
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருடம்தோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இதில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை திருவிழா வருகிற 16-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி 6-ந் தேதி கால் நாட்டு நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்குகிறது.
இந்தநிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் நேற்று காலை சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சென்று ஆய்வு செய்தார். அங்கு வரும் பக்தர்களின் அடிப்படை தேவைகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது அம்பை துணை சூப்பிரண்டு சதீஷ்குமார், இன்ஸ்பெக்டர் சுஜிதா ஆனந்த், வனச்சரகர்கள் பாபநாசம் சக்திவேல், முண்டந்துறை கல்யாணி மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி முருகன், கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்த பசுபதி சட்டநாதன், காந்திமதிநாதன் உட்பட பலர் உடன் இருந்தனர்.