உவரி கோவிலில் வைகாசி விசாக திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


உவரி கோவிலில் வைகாசி விசாக திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி

திசையன்விளை:

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழா இன்று (வியாழக்கிழமை) மாலை தொடங்கி நாளை நடைபெறுகிறது. திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று மாலை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், வள்ளியூர் துணை சூப்பிரண்டு யோகேஷ்குமார், திசையன்விளை தாசில்தார் முருகன், கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது அவர்கள் கோவில் உள்பிரகாரம், வெளி மண்டபம், திருவிழாவிற்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகள், சுகாதார வளாகம் கடற்கரை பகுதிகளை ஆய்வு செய்தனர். பின்னர் கடற்கரை பகுதியில் கூடுதல் மின்விளக்குகள் அமைக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்கவும் தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும்படியும் போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார். ஆய்வின்போது திசையன்விளை வருவாய் ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் தீயணைப்பு துறை, வருவாய்துறையினர் கலந்துகொண்டனர்.


Next Story