விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
காவேரிப்பாக்கத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு மேற்கொண்டார்.
ராணிப்பேட்டை
காவேரிப்பாக்கம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகளை ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது காவேரிப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை கரைக்க தேர்வு செய்யப்பட்ட சோமநாத கோவில் குளத்தையும் பார்வையிட்டார்.
பின்னர் சிலையை கரைக்க வரும்போது எந்தவித பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பை பலப்படுத்தவேண்டும். ரசாயனம் தடவிய சிலைகளை குளத்தில் கரைக்க அனுமதிக்கவேண்டாம். போலீஸ் அனுமதி இல்லாமல் ஒலி பெருக்கிகளை பயன்படுத்தினால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story