போலீசாரின் குழந்தைகளுக்கு சூப்பிரண்டு பாராட்டு


போலீசாரின் குழந்தைகளுக்கு சூப்பிரண்டு பாராட்டு
x

போலீசாரின் குழந்தைகளுக்கு சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.

திருநெல்வேலி

அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற நெல்லை மாவட்ட போலீசாரின் குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். தொடர்ந்து அவர் பேசும்போது, மாணவர்கள் தங்களது குறிக்கோளில் வெற்றியடையவும், மேற்படிப்பில் நன்கு படித்து உயர்ந்த நிலையை அடையவும் வேண்டும். சிறந்த துறையை தேர்வு செய்து மேன்மேலும் பல சாதனைகளை புரிய வேண்டும் என்று தெரிவித்தார்.


Next Story