போலீசாரின் வாகனங்களை சூப்பிரண்டு சிலம்பரசன் ஆய்வு


போலீசாரின் வாகனங்களை சூப்பிரண்டு சிலம்பரசன் ஆய்வு
x

நெல்லையில் போலீசாரின் வாகனங்களை சூப்பிரண்டு சிலம்பரசன் ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் மாதாந்திர ஆய்வு கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமை தாங்கினார். மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும், ரவுடிகள் மீதும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

முன்னதாக மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நெல்லை மாவட்ட போலீசாரின் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் காவலர்கள் அவசர காலங்களில் பணிக்கு செல்லும் வாகனங்கள், உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்கள் நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறதா? என போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் சிறப்பாக பணியாற்றிய போலீஸ்காரர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.


Next Story