சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம்


சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம்
x
தினத்தந்தி 22 April 2023 12:15 AM IST (Updated: 22 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம்

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

சொலவம்பாளையம் ஊராட்சியில் சொலவம்பாளையம், குமாரபாளையம், லட்சுமி நகர், இம்மிடிபாளையம், காமராஜர் நகர், சிக்கலாம்பாளையம், உதயம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் போர்வெல் தண்ணீரை பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. தற்போது கோடை வெயில் சுட்டெரிப்பதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதை போக்கும் வகையில், சொலவம்பாளையம் ஊராட்சியில் 3 மற்றும் 4-வது வார்டில் வசிக்கும் சுமார் 1,000 பேருக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.10 லட்சம் செலவில் ஊராட்சி கிணற்றில் மோட்டார் பொருத்தி தண்ணீரை எடுத்து, அருகில் எந்திரங்கள் அமைத்து சுத்திகரித்து, தினமும் 7 ஆயிரம் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வந்த நிலையில், அதை போக்க ஊராட்சி எடுத்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனர். இதை கிணத்துக்கடவு ஒன்றிய ஆணையாளர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்(ஊராட்சிகள்) சிக்கந்தர்பாட்சா ஆகியோர் பார்வையிட்டு, ஊராட்சி தலைவர் செந்தில்குமார் மற்றும் கவுன்சிலர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.


Next Story