ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம்தேசிய மக்கள் கட்சி கூட்டத்தில் தீர்மானம்


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம்தேசிய மக்கள் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 11 Feb 2023 7:00 PM GMT (Updated: 2023-02-12T00:31:09+05:30)
தர்மபுரி

தேசிய மக்கள் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் தர்மபுரியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நிறுவனர் இனமுரசு கோபால் தலைமை தாங்கினார். மாநில தலைவர் மாறன் பெருமாள், மாநில பொது செயலாளர் அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பது, முன்னாள் அமைச்சரும், தேர்தல் பணிக்குழு தலைவருமான கே.ஏ.செங்கோட்டையனை நேரில் சந்தித்து ஆலோசனையை பெற்று தேசிய மக்கள் கட்சியின் தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் நிறுவனர் இனமுரசு கோபால் தலைமையில் குழுவாக சென்று இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறுவதற்கு முழுவீச்சுடன் பணியாற்றுவது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story