"போரில் உக்ரைனுக்கு ஆதரவு" - புதுச்சேரி பிரான்ஸ் தூதரகத்தில் பறக்கும் உக்ரைன் தேசிய கோடி..!
உக்ரைனுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன.
புதுச்சேரி,
உக்ரைனுக்கு எதிராக ரஷியா மேற்கொண்டு வரும் போர் 8 மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த தாக்குதலை உக்ரைனும் சளைக்காமல் எதிர்கொண்டு வருகிறது. உக்ரைனின் மின் நிலையங்கள், முக்கிய நகரங்கள் ஆகியவற்றை குறிவைத்து ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதல்களில் இரு தரப்பிலும் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர் அதே சமயம் உக்ரைன் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன.
இந்த நிலையில், ரஷியா தொடுத்துள்ள போரில் உக்ரைனுக்கு பிரான்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் துணை தூதரகத்தில் உக்ரைனின் தேசியக் கொடி வரையப்பட்டு, அதன் மீது பிரான்ஸ் உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கிறது என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. பிரான்ஸ் துணை தூதரகத்தில் மேல் அந்நாட்டு தேசியக்கொடி பறக்க, கீழே உக்ரைன் கொடி வரையப்பட்டு அதில் இந்த வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.