சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி புதிய முதல்வர் பொறுப்பேற்பு
சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி புதிய முதல்வர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தென்காசி
சுரண்டை:
சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் புதிய முதல்வராக இரா.சின்னத்தாய் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2016 வரை இணைப் பேராசிரியராகவும், 2016 முதல் 2020-ம் ஆண்டு வரை தமிழ்த் துறை தலைவராகவும், நெல்லை ராணி அண்ணா கல்லூரியில் பணிபுரிந்துள்ளார். பின்னர் சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் நிலை முதல்வராக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்தார். தற்போது சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் முதல் நிலை முதல்வராக பொறுப்பேற்றார். அவருக்கு கல்லூரியின் அனைத்து துறை தலைவர்கள், அலுவலக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story