சூரங்குடி கண்மாயை சீரமைக்க வேண்டும்


சூரங்குடி கண்மாயை சீரமைக்க வேண்டும்
x

சூரங்குடி கண்மாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாத்தூர் யூனியன் கவுன்சிலர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

விருதுநகர்

சாத்தூர்,

சூரங்குடி கண்மாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாத்தூர் யூனியன் கவுன்சிலர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கவுன்சிலர்கள் கூட்டம்

சாத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய சேர்மன் நிர்மலா கடற்கரைராஜ் தலைமை தாங்கினார்.

துணைச்சேர்மன் செல்லத்தாய் குணசேகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து கூறினர். அதன் விவரம் வருமாறு:-

பொதுமக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான சூரங்குடி கண்மாயை சீரமைக்க வேண்டும்.

மருத்துவ முகாம்

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாளர்கள் முறையாக பணிக்கு வருகின்றனரா? பணி முறையாக நடைபெறுகிறதா? என ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒத்தையால் ஊராட்சி பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவி உள்ளது. ஆதலால் அங்கு மருத்துவ முகாம் அமைத்து அப்பகுதி மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் மனு அளித்தனர். இந்த மனு குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் வெள்ளைச்சாமி கூறினார். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story