செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை: காவேரி மருத்துவமனையில் பாதுகப்பு பணிக்கு கூடுதல் போலீசார் குவிப்பு


செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை: காவேரி மருத்துவமனையில் பாதுகப்பு பணிக்கு கூடுதல் போலீசார் குவிப்பு
x
தினத்தந்தி 21 Jun 2023 8:48 AM IST (Updated: 21 Jun 2023 10:27 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று வரும் நிலையில், கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை,

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவர் ரகுராமன் தலைமையிலான மருத்துவக்குழு அவருக்கு சிகிச்சை செய்து வருகின்றனர். மருத்துவமனையின் 7-வது தளத்தில் ஸ்கை-வியூ என்ற அறையில் அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. இரண்டு முதல் நான்கு மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

அமலாக்கத்துறையின் காவல் முடிய 3 நாட்கள் உள்ளநிலையில் தற்போது செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சைக்குப் பின் 3 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவிலும், 7 நாட்கள் மருத்துவ கண்காணிப்பிலும் இருப்பார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், செந்தில்பாலாஜிக்கு 2 மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை நடைபெற்று வரும் நிலையில், சென்னை, காவிரி மருத்துவமனையில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story