"அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மகப்பேறு குறைந்துள்ளது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மகப்பேறு குறைந்துள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x

அறுவை சிகிச்சை மகப்பேறு விரைவில் பூஜ்ஜிய நிலையை எட்ட முயற்சி முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை எழும்பூர் அரசு தாய்-சேய் நல மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் சேவை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஆகியவற்றை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மகப்பேறு 43 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் விரைவில் பூஜ்ஜிய நிலையை எட்ட முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


Next Story