ரூ.37¼ லட்சத்திற்கு சூரியகாந்தி விதை ஏலம்

திருப்பூர்
வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெற்றது. இதில் கொங்கப்பட்டி, பொருளூர், கொத்தயம், கோவிலூர், ரங்கவலசு பகுதிகளைச் சேர்ந்த 101 விவசாயிகள் 1530 சூரியகாந்தி விதை மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஈரோடு, நடுப்பாளையம், பூனாச்சி, காங்கயம், சித்தோடு, கஸ்பாபேட்டை பகுதியைச் சேர்ந்த 9 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர்.
நல்ல தரமான சூரியன் விதைகள் ரூ.56.80 பைசாவிற்கும், இரண்டாம் தரமான சூரியகாந்தி விதைகள் ரூ.46.44 பைசாவிற்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.37 லட்சத்து 31 ஆயிரத்து 403-க்கு விற்பனை நடைபெற்றது. இந்த தகவல்களை ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஸ்ரீ மகுடேஸ்வரன் தெரிவித்தார்.
Next Story






