கொட்டையூர்சூரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


கொட்டையூர்சூரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 11 Sept 2023 12:15 AM IST (Updated: 11 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கொட்டையூர் சூரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி


தியாகதுருகம்,

தியாகதுருகம் அருகே கொட்டையூரில் விநாயகர் மற்றும் சூரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருப்பணிகள் நடைபெற்று, நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி நேற்று முன்தினம் விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி ஆகியவற்றுடன் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. மேலும் நேற்று காலை கோமாதா பூஜை நடந்து, 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து மேளதாளம் முழங்க கடம் புறப்பட்டு விநாயகர் மற்றும் சூரியம்மன் கோவில்களின் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story