ரூ.13¾ லட்சத்திற்கு சூரியகாந்தி விதை ஏலம்
திருப்பூர்
ரூ.13¾ லட்சத்திற்கு சூரியகாந்தி விதை ஏலம்
வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெற்றது. அதில் நாகுல்பட்டி, பூலாம்பட்டி, எலவனூர், சின்னபுத்தூர், மணக்கடவு, மொட்டனூத்து பகுதிகளைச் சேர்ந்த 29 விவசாயிகள் 578 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். காங்கயம், முத்தூர், நடுப்பாளையம், பூனாச்சி ஈரோடு, சித்தோடு, கஸ்பாபேட்டை பகுதிகளை சேர்ந்த 9 வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர். நல்ல தரமான சூரியகாந்தி விதைகள் ரூ.50.94-க்கும், 2-ம் தரமான சூரியகாந்தி விதைகள் ரூ.45.69-க்கும் ஏலம் எடுத்தனர். மொத்தம் ரூ.13 லட்சத்து 82 ஆயிரத்து 962-க்கு விற்பனை நடைபெற்றது. இந்த தகவலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி.மகேஸ்வரன் தெரிவித்தார்.
Next Story