கொலை வழக்கில் தலைமறைவானவர் திருச்சி கோர்ட்டில் சரண்


கொலை வழக்கில் தலைமறைவானவர் திருச்சி கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 26 Sep 2023 6:45 PM GMT (Updated: 26 Sep 2023 6:46 PM GMT)

கொலை வழக்கில் தலைமறைவானவர் திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்தார்

வேலூர்

குடியாத்தம்

கொலை வழக்கில் தலைமறைவானவர் திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்தார்

குடியாத்தத்தை அடுத்த எர்த்தாங்கல் கிராமம் ஏரியான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாரத் என்கிற குபேந்திரன் (வயது 56). விவசாயியான இவரை கடந்த 14-ந் தேதி எர்த்தாங்கல் பரதராமிபட்டி பகுதியைச் சேர்ந்த வளர்மதி என்கிற செல்வி (48), அவரது மகன் நவீன்குமார் ஆகியோர் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்து வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குபேந்திரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வளர்மதியை கைது செய்தனர். அவரது மகன் நவீன்குமார் தலைமறைவாகிவிட்டார்.

இந்த நிலையில் அவர் திருச்சியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனையடுத்து குடியாத்தம் தாலுகா போலீசார் நவீன்குமாரை தேடி திருச்சிக்கு சென்றனர். போலீசார் தேடுவதை அறிந்து நவீன்குமார் திருச்சி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் (எண் 2) மாஜிஸ்திரேட் எம்.பாலாஜி முன்னிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை சரண் அடைந்தார். திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட அவரை போலீசார் குடியாத்தம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story