12 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு


12 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
x

மனநலம் பாதிக்கப்பட்டு 12 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

திருப்பத்தூர்

மனநலம் பாதிக்கப்பட்டு 12 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ஜார்கண்ட் மாநிலம், கூம்லா மாவட்டம் கம்ஹாரியா கிராமத்தை சேர்ந்தவர் ஜார்ஜ் லக்ரா (வயது 54). இவருக்கு இஞ்சலின் என்ற மனைவியும். எரிக், அனுராக் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். பட்டதாரியான ஜார்ஜ் லக்ரா ராஞ்சியில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்வில் தோல்வியுற்றார். அது முதல் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு, கிடைக்கும் வேலைகளைச் செய்து வந்துள்ளார். மேலும் லாரி கிளீனராகவும் பணியாற்றி வந்த இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனார்.

இந்தநிலையில் 6 ஆண்டுகளுக்கு முன் திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைப் பகுதியில் சுற்றித் திரிந்த இவர் மீட்டு, திருப்பத்தூரில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு இவருக்கு சிகிச்சைகள் மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு பழைய நினைவு திரும்பிய பின்னர் தனது ஊர், குடும்பத்தார் குறித்து தெரிவித்துள்ளார். அதன்பேரில் இல்ல நிர்வாகிகள் ஜார்ஜ் லக்ராவின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து, வரவழைக்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் முன்னிலையில், ஜார்ஜ் லக்ரா, அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டார். மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து, மாவட்ட மனநல அலுவலர் பிரபவராணி, உதவும் உள்ளங்கள் மனநல காப்பக நிர்வாகி ரமேஷ், சமூகப் பணியாளர் லட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story