சுருளியாறு மின்நிலைய பகுதியில் சாலையில் உலா வரும் யானைகள்


சுருளியாறு மின்நிலைய பகுதியில்   சாலையில் உலா வரும் யானைகள்
x

கூடலூர் அருகே சுருளியாறு மின்நிலைய பகுதியில் சாலையில் காட்டுயானைகள் உலா வந்தன

தேனி

கூடலூர் அருகே சுருளியாறு மின்நிலையம் உள்ளது. இதனையொட்டி வண்ணாத்திப்பாறை, மங்கலதேவி கோவில், பனியன்குடி, அத்தி ஊத்து, மாவடி, வட்டதொட்டி, சுருளி அருவி ஆகிய வனப்பகுதிகள் அமைந்துள்ளன.இந்த பகுதியில் மான், யானை, கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் சுற்றித்திரிகின்றன. இங்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதிக்குள் (ஈக்கள்) கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து உள்ளது.

இதனால் வனப்பகுதியில் சுற்றித்திரியும் காட்டுயானைகள் சுருளியாறு மின்நிலையம் செல்லும் சாலைக்கு வருகின்றன. பின்னர் அவை அங்குமிங்கும் உலா வருகின்றன. இதனால் அலுவலர்கள் மற்றும் மின்வாரிய குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story