கண்காணிப்பு கேமரா காட்சிகள் சென்னை கட்டுப்பாட்டு அறையில் காணும் வகையில் ஏற்பாடு
மதுரை மத்திய சிறையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகள் சென்னை கட்டுப்பாட்டு அறையில் பெரிய திரையில் காணும் வகையில் ஏற்படு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மத்திய சிறையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகள் சென்னை கட்டுப்பாட்டு அறையில் பெரிய திரையில் காணும் வகையில் ஏற்படு செய்யப்பட்டுள்ளது.
தீவிர கண்காணிப்பு பணிகள்
தமிழக சிறைமதுரை மத்திய சிறையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகள் சென்னை கட்டுப்பாட்டு அறையில் பெரிய திரையில் காணும் வகையில் ஏற்படு செய்யப்பட்டுள்ளது.துறை டி.ஜி.பி.யாக அமரேஷ் பூஜாரி பதவியேற்ற பின் பல்வேறு நவீன மாற்றங்களை சிறை துறையில் செய்து வருகிறார். அதில் குறிப்பாக நவீன நேர்காணல் அறை, போன் மூலம் கைதிகள் உறவினர்கள் பேசுதல், அதிக அளவில் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிப்பு, சிறை அங்காடி ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும் அனைத்து மத்திய சிறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது.
இது தவிர சிறை காவலர்கள் உடலில் அணிந்திருக்கும் நடமாடும் கண்காணிப்பு கேமராக்களும் அனைத்து மத்திய சிறைகளுக்கும் தலா 5 வழங்கப்பட்டுள்ளது. அதனை ரோந்து செல்லும் காவலர்கள் அணிந்து செல்லும் பொழுது சிறையில் முழு பகுதிகளும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படும். இவ்வாறு கண்காணிப்பதன் மூலம் குற்றச்சம்பவங்கள் பெருமளவில் குறைந்து வருகிறது.
பெரிய திரையில்
இந்த நிலையில் மத்திய சிறையில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் சென்னை தலைமையகத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையில் பெரிய திரையில் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 9 மத்திய சிறைகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டச் சிறை கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் இனி சென்னை சிறைத்துறை தலைமை அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க இயலும்.
அங்கிருந்து அனைத்து சிறைகளின் சிறை பாதுகாப்பு மற்றும் சிறைவாசிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு தலைமையகம் மூலம் அறிவுரைகள் வழங்கப்படும். இந்த நிகழ்வு நேற்று முதல் செயல்பாட்டு வந்ததாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.