தனியார் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்

குழந்தைகளின் பாதுகாப்பிற்காக தனியார் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி
குழந்தைகளின் பாதுகாப்பிற்காக தனியார் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
கண்காணிப்பு கேமரா
மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வருவதற்காக தனி யார் பள்ளி நிர்வாகங்கள் சார்பில் வாகன வசதி செய்யப்பட்டு உள்ளது. பள்ளி வாகனங்கள் விபத்துகளில் சிக்காமல் இருக்கவும், நல்ல செயல்திறனுடன் உள்ளதா? என்பதை கண்டறியவும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகே தனியார் பஸ்களை இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது பள்ளி வாகனங்களுக்குள் குழந்தை களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி பள்ளி வாகனங்களில் டிரைவர் இருக்கைக்கு முன்புறம், வாகனத்தில் உள்ள குழந்தைகள் தெரியும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-
குழந்தைகளின் பாதுகாப்பு
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை பகுதிகளில் 67 தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகள் சார்பில் 350 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு இயக்குவதற்கு தகுதியான வாகனங்களை மட்டும் குழந்தைகளை அழைத்து செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.
பள்ளி வாகனங்களில் குழந்தைகள் நின்று கொண்டு வருகிறார்களா?, குழந்தைகள் நடத்தப்படும் விதம் உள்பட குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து பள்ளி வாகனங் களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
தகுதி சான்று
12 இருக்கைகள் இருந்தால் ஒரு கேமராவும், அதற்கு மேல் இருந்தால் கூடுதலாக கேமராக்கள் பொருத்த வேண்டும். கேமராக்களின் செயல்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் ஆய்வு செய்யும் வகையில் வசதி கொடுக்கப்பட்டு இருக்கும்.
வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வாகனங்கள் எப்.சி.க்கு வரும் போது கண்காணிப்பு கேமரா செயல்படுகிறதா? என்று ஆய்வு செய்யப்படும். கேமரா செயல்பாட்டில் இருந்தால் மட்டுமே எப்.சி. தகுதி சான்று வழங்கப்படும்.
இதை தவிர பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படும் போது கண்காணிப்பு கேமரா, ஜி.பி.ஆர்.எஸ். வசதி பயன்பாட்டில் உள்ளதா என்று கண்காணிக்கப்படும். கல்வித்துறை அதிகாரிகளும் தனியார் பள்ளிகளுக்கு ஆய்வு செல்லும் போது வாகனங்களை ஆய்வு செய்வார்கள்.
ஜி.பி.ஆர்.எஸ். வசதி மூலம் பள்ளி வாகனம் எங்கு வருகி றது. எவ்வளவு நேரத்தில் வரும் என்பது உள்ளிட்ட தகவல் களை குழந்தைகளின் பெற்றோர் தெரிந்து கொள்ள முடியும். இதற்கான வசதியை பள்ளி நிர்வாகம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
கண்காணிக்க வேண்டும்
வாகனங்களை இயக்கும் போது, பின்னால் குழந்தைகள் நிற்கி றார்களா? என்பதை பார்த்து கொள்ள வேண்டும். மாதம் ஒரு முறை பள்ளி நிர்வாகம் டிரைவர்களிடம் வாகனத்தின் செயல்பாடு குறித்து கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். டிரைவர்களின் செயல்பாட்டையும் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.