அனைத்து கடைகளிலும் கண்காணிப்பு கேமரா
அனைத்து கடைகளிலும் கண்காணிப்பு கேமரா
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் முக்கிய இடங்களில் உள்ள வீடுகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்பட அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் கருப்பசாமிபாண்டியன், செந்தில்குமார், ஜெகதீசன் மற்றும் போலீசார் நேரில் சென்று துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கூறும்போது, கோவை-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் ஏலூர் பிரிவு முதல் கோவில்பாளையம் சேரன் நகர் வரை 40-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் தனியார் இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த அறிவுறுத்தி வருகிறோம். இதன் மூலம் குற்ற சம்பவங்கள் முற்றிலும் தடுக்கப்படும் என்றனர்.