வால்பாறையில் 4 இடங்களில் கேமரா பொருத்தி கண்காணிப்பு


வால்பாறையில் 4 இடங்களில் கேமரா பொருத்தி கண்காணிப்பு
x
தினத்தந்தி 25 April 2023 12:15 AM IST (Updated: 25 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் தொழிலாளர்களை சிறுத்தைப்புலி தாக்கியதால், அதன் நடமாட்டத்தை 4 இடங்களில் கேமரா பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் தொழிலாளர்களை சிறுத்தைப்புலி தாக்கியதால், அதன் நடமாட்டத்தை 4 இடங்களில் கேமரா பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

தொழிலாளர்களை தாக்கியது

வால்பாறை அருகே சிறகுன்றா எஸ்டேட் கீழ் பிரிவு 35-ம் ெநம்பர் தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்த வடமாநில பெண் தொழிலாளி சீதாமுனிக்குமாரியை கடந்த 20-ந்் தேதி மதியம் 12 மணியளவில் சிறுத்தைப்புலி தாக்கியது. இதேபோன்று மறுநாள், அதே தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்த வடமாநில தொழிலாளி அனில் ஓரானை மதியம் 11.50 மணியளவில் சிறுத்தைப்புலி தாக்கியது. அங்கு வால்பாறை வனச்சரக வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

4 இடங்களில் கேமரா

இதற்கிடையில் ஏற்கனவே அந்த சிறுத்தைப்புலி, அதே பகுதியில் ஒரு எருமை மாட்டை கடித்து கொன்றது. அதன் உடல் அங்கேயே கிடக்கும் நிலையில், அடிக்கடி வந்து மாமிசத்தை தின்று செல்கிறது. இதை அறிந்த வனத்துறையினர் அந்த பகுதியிலும், தேயிலை தோட்ட பகுதியிலும் 4 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளனர். தொடர்ந்து அங்கு சிறுத்தைப்புலியின் நடமாட்டம் தொடர்ந்து இருக்கிறதா? என்று இரவு-பகலாக கண்காணித்து வருகின்றனர்.


Next Story