நெமிலி ஒன்றியத்தில் கலெக்டர் வளர்மதி ஆய்வு


நெமிலி ஒன்றியத்தில் கலெக்டர் வளர்மதி ஆய்வு
x

நெமிலி ஒன்றியத்தில் கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்தார். அப்போது முதல்வரின் முகவரி திட்டத்தை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

ராணிப்பேட்டை

கலெக்டர் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி உளியநல்லூர் கிராமத்தில் முதல்வரின் முகவரி திட்டத்தின் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார். அப்போது ரமேஷ் என்பவர் கொடுத்த மனு கடந்த இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது கண்டறியப்பட்டது. உடனடியாக பட்டா மாற்றம் செய்து கொட்டகை அமைக்க வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் பணிகளை மெத்தனமாக செய்தால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். தொடர்ந்து ஆட்டுப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு கர்ப்பிணிகளுக்கு முறையாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறதா, நோயாளிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளதா என்பதையும் கேட்டறிந்தார்.

அதிக குழந்தைகளை..

தொடர்ந்து ஆட்டுப்பாக்கம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு செனறு எவ்வளவு குழந்தைகள் மையத்திற்கு வருகிறார்கள், அவர்களுக்கு முறையாக ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார். பின்பு குழந்தைகளின் வருகை பதிவேட்டை சரிபார்த்து் அதிகமான குழந்தைகளை மையத்தில் சேர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.

பின்னர் அதே கிராமத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறை பள்ளி கட்டிட பணியை பார்வையிட்டு விரைந்து முடிக்க உத்தரவிட்டார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராமன், பாஸ்கரன், நெமிலி தாசில்தார் பாலசந்தர் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story