பில்லூர் 3-வது குடிநீர் திட்ட பணிகள் ஆய்வு
ரூ.799 கோடியில் செயல்படுத்தப்பட்டு வரும் பில்லூர் 3-வது குடிநீர் திட்டத்தின் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் ஆலோசனை நடத்தினார்.
கோவை
ரூ.799 கோடியில் செயல்படுத்தப்பட்டு வரும் பில்லூர் 3-வது குடிநீர் திட்டத்தின் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் ஆலோசனை நடத்தினார்.
பில்லூர் 3-வது குடிநீர் திட்டம்
கோவை நகருக்கு கூடுதல் குடிநீர் வினியோகம் செய்ய பில்லூர் 3-வது குடிநீர் திட்டப்பணிகள் ரூ.799 கோடியில் நடைபெற்று வரு கிறது. இந்த பணிகளின் தற்போதைய நிலை மற்றும் கோவை தெற்கு மண்டலத்தில் குறிச்சி, குனியமுத்தூர் பகுதியில் ரூ.591 கோடியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் வி.தட்சணாமூர்த்தி நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டம் கோவை பாரதி பார்க் சாலையில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணை யாளர் பிரதாப் முன்னிலை வகித்தார். பின்னர் அதிகாரிகளுக்கு அவர் சில உத்தரவுகளை பிறப்பித்தார்.
25-ந்தேதி சோதனை ஓட்டம்
நெல்லித்துறையில் முருகையன் பரிசல்துறை பகுதியில் ரூ.134 கோடி யில் நீரேற்று நிலையம் நடைபெற்று வருகிறது. அங்கு 25-ந் தேதி சோதனை ஓட்டம் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
அடுத்த மாதம் (அக்டோபர்) 20-ந் தேதி மருதூர் சுத்திகரிப்பு நிலை யத்தில் குடிநீர் பம்பிங் செய்து பன்னிமடை பகுதியில் ரூ.104 கோடி யில் 73 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட 2 குடிநீர் சேகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரும் வகையிலும் போர்க்கால அடிப்படையில் கட்டுமான பணிகளை விரைவா கவும், தரமாகவும் முடிக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் வி.தட்சணாமூர்த்தி அறிவுறுத்தினார்.
பாதாள சாக்கடை திட்டம்
இதைத்தொடர்ந்து அவர், ரூ.591 கோடியில் நடைபெற்று வரும் குறிச்சி குனியமுத்தூர் பாதாள சாக்கடை திட்டப்பணியில் 390 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணி குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், இந்த மாத இறுதிக்குள் 17 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய் அமைக்கும் பணிகளை முடிக்கவும் உத்தரவிட்டார்.கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய கோவை தலைமை பொறியா ளர் செல்லமுத்து, ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், செயற்பொறி யாளர்கள் செந்தில்குமார், தமிழ்செல்வன், உதவி செயற்பொறியா ளர்கள் பட்டன், மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.