வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு


வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 19 July 2023 1:30 AM IST (Updated: 19 July 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

ஆதிவாசி காலனியில் தொகுப்பு வீடுகள் பழுது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் தாலுகா எருமாடு அருகே மூப்பன்குன்னு ஆதிவாசி காலனி உள்ளது. இங்கு ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளில், அவர்கள் வசித்து வருகிறார்கள். தற்போது வீடுகளின் மேற்கூரைகள் பழுதடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் மழை காலங்களில் தண்ணீர் உள்ளே ஒழுகுகிறது. மேலும் வீடுகள் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. அத்துடன் காலனிக்கு செல்லும் நடைபாதை சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் ஆதிவாசி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்தநிலையில் பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் மூப்பன்குன்னு ஆதிவாசி காலனிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது ஆதிவாசி மக்கள் புதிய தொகுப்பு வீடுகள் கட்ட வேண்டும். மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு உயர் அதிகாரிகளிடம் பரிந்துரை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் தெரிவித்தார்.


Related Tags :
Next Story