ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆய்வு


ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆய்வு
x

பரப்பாடியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் இலங்குளம் பஞ்சாயத்து பரப்பாடியில் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு நடைபெறும் அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகளையும், அரசு வழங்கும் இலவச வீடுகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்குவதற்கான இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உதவி திட்ட இயக்குனர் சுமதி, யூனியன் ஆணையாளர் நடராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிஷோர்குமார், இலங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் வி.இஸ்ரவேல் பிரபாகரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மனோரஞ்சிதம், பணி மேற்பார்வையாளர் ஏசுதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் நாங்குநேரி யூனியன் அலுவலகம், சிங்கநேரி, உன்னங்குளம், செண்பகராமநல்லூர் ஊராட்சிகளிலும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ் ஆய்வு மேற்கொண்டார்.


Next Story