மதுரையில் மெட்ரோ ரெயில் சேவைக்காக சர்வே பணி தீவிரம்


மதுரையில் மெட்ரோ ரெயில் சேவைக்காக சர்வே பணி தீவிரம்
x
தினத்தந்தி 30 April 2023 12:15 AM IST (Updated: 30 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் ரூ.8,500 கோடியில் மெட்ரோ ரெயில் சேவைக்கான சர்வே பணி நடந்து வருகிறது. விரிவான திட்ட அறிக்கையும் தயாராகி வருகிறது.

மதுரை

திருப்பரங்குன்றம்,

மதுரையில் ரூ.8,500 கோடியில் மெட்ரோ ரெயில் சேவைக்கான சர்வே பணி நடந்து வருகிறது. விரிவான திட்ட அறிக்கையும் தயாராகி வருகிறது.

மெட்ரோ ரெயில் சேவை

மதுரையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மெட்ரோ ரெயில் சேவை வேண்டும் என்பது மதுரை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் மதுரையில் மெட்ரோ ரெயில்சேவைக்காக சாத்தியகூறுதிட்ட அறிக்கை தயார்படுத்தப்பட்டு தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் சட்டசபையில் நிதிநிலை அறிக்கையில் மதுரையில் மெட்ரோ ரெயில் சேவைக்காக ரூ.8,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மதுரை ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31.30 கிலோ மீட்டர் தூரம் வரை மெட்ரோ ரெயில் சேவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வருகின்ற 2024-ல் தொடங்கி 2027-ல் முடிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மண்பரிேசாதனை

இதனையொட்டி முதற்கட்டமாக வழித்தடங்களில் மின்கம்பங்கள், குடிநீர் குழாய்கள், பாதாள சாக்கடைகள் உள்ளதா? என்று கண்டறியும் பணிநடந்தது.

பின்னர் 2-ம் கட்டமாக அரை கிலோ மீட்டர் தூரம் இடைவெளிக்கு ஒரு இடம் வீதம் 76 இடங்களில் ட்ரிலிங் மிஷின்கள் மூலம் 30 அடி ஆழத்திற்கு மண் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதில் தற்போது 40 இடங்கள் வரை தரையின் திடம் அறிய மண் எடுக்கப்பட்டு அதை ஐதராபாத்தில் உள்ள தேசிய மண் மற்றும் பகுப்பாய்வு மைய ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது.

டிரோன் மூலம் ஆய்வு

தற்ேபாது 3-ம் கட்டமாக மதுரை ஒத்தக்கடையில் இருந்து திருமங்கலம் வரை ரெயில் நிறுத்த கூடிய இடங்கள் மற்றும் பாலம் அமைய கூடிய இடங்களின் "லெவல்" பார்க்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. மேலும் கப்பலூரில் இருந்து திருநகர் முதல் பஸ் நிறுத்தம் வரை வழித்தட அமைப்பினை டிரோன் மூலமாக ஆய்வு மேற்கொண்டனர். வேனில் டிரோன் ெபாருத்தப்பட்டு சர்வே பணியும் தீவிரமாக நடைபெற்றது.

இந்த பணிகளுக்கு இடையே மெட்ரோரெயில் சேவைக்கான கட்டமைப்பு தொடங்குவதற்கு சாத்தியகூறான விரிவான திட்ட அறிக்கை மற்றும் வரைபடம் தயார்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. சென்னைக்கு அடுத்தபடி மதுரைக்கு மெட்ரோ ரெயில் சேவை தொடர்பாக சட்டசபையில் அறிவிப்பு வெளியான ஒரு மாதத்திலேயே மண் பரிசோதனை, வழித்தட ஆய்வு என்று அடுத்தடுத்து பணிகள் வேகமெடுத்து வருகிறது.


Related Tags :
Next Story