அனைவருக்கும் வீடு வழங்க கணக்கெடுக்கும் பணி
ஆனைமலை ஊராட்சி ஒன்றிய பகுதியில் அனைவருக்கும் வீடு வழங்க கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டனர்
ஆனைமலை
ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைவருக்கும் வீடு வழங்குவதற்காக கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. அந்த இலக்கை அடைந்திட வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குடிசைகள், நிலைத்த தன்மையற்ற, வாழ தகுதியற்ற வீடுகள் எத்தனை உள்ளன.
அவற்றில் வசிக்கும் குடும்பங்கள் எத்தனை என்று கணக்கெடுத்தனர். மேலும் இயற்கை பேரிடர் அல்லது தீ விபத்துகளில் வீட்டை இழந்த தற்போது குடிசை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கும், ஊரக பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களின் இலவச வீட்டுமனை பட்டா பெற்று வீடு கட்ட இயலாத குடும்பங்கள் உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது.
அதோடு அங்கீகரிக்கப்படாத வீட்டுமனை பிரிவுகளில் உள்ள குடிசைகள், வாழத் தகுதியற்ற வீடுகளில் வசிக்கும் குடும்பங்கள் குறித்தும் ஆனைமலை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கொடுத்தனர்.
அதற்காக கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தில் 30 விதமான கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. அந்த படிவத்தில் கேட்கப்பட்ட கேள்விகளை கேட்டு அதிகாரிகள் பூர்த்தி செய்தனர்.
இதில் தாத்தூர் ஊராட்சி பகுதியில் வட்டார வளர்ச்சி ஆணையர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தார்.
அப்போது ஊராட்சி தலைவர், ஊராட்சி செயலர், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் ஆகியோர் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டனர். இந்த மாத இறுதிக்குள் கணக்கெடுப்பை பூர்த்தி செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.