புதிய குடிசை வீடுகள் கட்ட கணக்கெடுப்பு பணிகள் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் தகவல்
கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் புதிய குடிசை வீடுகள் கட்ட கணக்கெடுப்பு பணிகள் நடப்பதாக ஒன்றிய குழு தலைவர் தெரிவித்தார்.
கலசபாக்கம்
கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் புதிய குடிசை வீடுகள் கட்ட கணக்கெடுப்பு பணிகள் நடப்பதாக ஒன்றிய குழு தலைவர் தெரிவித்தார்.
கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் அதன் தலைவர் அன்பரசி ராஜசேகரன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலசபாக்கம் ஒன்றியத்தில் வளர்ச்சிப்பணிகள் குறித்தும் நிறைவேற்றப்பட்ட பணிகளைப் பற்றியும் பேசப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி பேசுகையில், ''கிட்டாம்பாளையம் ஊராட்சியில் புதிய சிமெண்ட் சாலை அமைத்தல், ஆதமங்கலம் புதூர் ஊராட்சியில் உள்ள தென்னன்ட தெருவில் பக்க கால்வாய் அமைக்கும் பணி, கடலாடி ஊராட்சியில் ஆற்றங்கரையில் இருந்து புதுப்பேட்டை பகுதிக்கு 428 மீட்டர் தூரத்துக்கு குழாய் அமைக்கும் பணி, லாடவரம் ஊராட்சியில் மயான பாதையில் சிறு பாலம் அமைத்தல். எர்ணாமங்கலம் ஊராட்சியில் பானாம்பட்டு ஏ.டி.சி திட்டத்தில் சிமெண்ட் சாலை அமைத்தல் பணி, எலத்தூர் ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி. கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கிராம ஊராட்சிகளுக்கு புதிய குடிசை வீடுகள் கட்ட கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணி செய்த பணியாளர்களுக்கு ரூ 9 லட்சத்து 90 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்டது'' என்றார்
கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் வேலு, வட்டார வளர்ச்சி (கிராம ஊராட்சி) அலுவலர் கோவிந்தராஜுலு, மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள கலந்து கொண்டனர்.