சூர்யபாலா அணி வெற்றி
மாவட்ட கிரிக்கெட் போட்டியில் சூர்யபாலா அணி வெற்றி பெற்றது
கோவை
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆகியவை சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டியில் சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் அணியும், ரெட் டைமண்ட் அணியும் மோதின.
முதலில் விளையாடிய சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ரெட் டைமண்ட் அணி 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 43 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
2-வது போட்டியில் சூர்யபாலா அணி, என்.ஐ.ஏ. அணியை எதிர்கொண்டது. முதலில் களம் இறங்கிய சூர்யபாலா அணி 45.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய என்.ஐ.ஏ. அணி 36 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
3-வது போட்டியில் சூர்யபாலா சி.ஏ. அணியும், டெவில் ஸ்டோக்கர்ஸ் அணியும் மோதின. முதலில் ஆடிய சூர்யபாலா சி.ஏ. அணி 40.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.