காதலி திருமணம் செய்ய மறுத்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
காதலி திருமணம் செய்ய மறுத்ததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விசைத்தறி தொழிலாளி
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவர் கருப்புசாமி. இவர் டீக்கடையில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கண்ணம்மா. இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக வெள்ளகோவில் சிவநாதபுரம் கணபதி நகரில் வசித்து வருகிறார்கள்.
இதில் 2-வது மகனான கார்த்திகேயன் (வயது 26) அந்த பகுதியில் உள்ள ஒரு விசைத்தறி மில்லில் வேலை செய்து வந்தார். இதற்கிடையில் கார்த்திகேயனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
மேலும் கார்த்திகேயன் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் கார்த்திகேயனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாலும், அவரது நடவடிக்கை சரியில்லாததாலும் கடந்த சில நாட்களாக கார்த்திகேயனின் காதலி அவரை திருமணம் செய்ய மறுத்து விட்டதாக தெரிகிறது.
இதன் காரணமாக வாழ்க்கையில் வெறுப்படைந்த வாலிபர் கார்த்திகேயன் தனது வீட்டு மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வெள்ளகோவில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வெள்ளகோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அர்ச்சுனன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பவம் அந்த பகுதியல் பரபரப்பை ஏற்படுத்தியது.