வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு  தற்கொலை
x
திருப்பூர்


அவினாசியை அடுத்துகந்தம்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி மகன் குமரேசன் (வயது 27). பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு நேரம் சரியில்லை என்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அய்யம்பாளையத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கந்தம்பாளையத்தில் அவரது வீட்டிற்குவந்துள்ளார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த நிலையில் அவினாசி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்காமல் அவரது உடலை அடக்கம் செய்ய முயன்றதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக அவினாசி போலீசார் சம்பவ இடம் சென்று வழக்குபதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.


Next Story