மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை


மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை
x
திருப்பூர்


காங்கயம் அருகே உள்ள மீனாட்சி வலசை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 42). தேங்காய் மட்டை உரிக்கும் தொழிலாளி. இவரது மனைவி கோமதி. இவர்களுடைய மகன் கவுதம்மணிகண்டன் (15), மகள் ரூபாஸ்ரீ (13). முத்துசாமி கடந்த 2 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இவர் கடந்த 3-ந் தேதி மேட்டுப்பாறை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி அதில் எலி பேஸ்ட் மருந்தையும்(விஷம்) கலந்து குடித்துவிட்டு அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு சிறிது நேரத்தில் வீட்டில் தொடர்ச்சியாக வாந்தி எடுத்துள்ளார். இதனை பார்த்த முத்துசாமியின் உறவினர்கள் அவரை காங்கயம் தலைமை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி முத்துசாமி இறந்தார். இது குறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story