தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவி தற்கொலை


தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவி தற்கொலை
x
திருப்பூர்


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 43) கட்டிட தொழிலாளி. இவர் வெள்ளகோவில் செம்மாண்டம் பாளையம் பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக குடியிருந்து கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெயப்பிரியா என்ற 17 வயது மகளும், 13 வயதில் மகனும் உள்ளனர். ஜெயப்பிரியா தற்போது பிளஸ்-2 படிக்க செல்ல இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெயப்பிரியா அதிக நேரம் செல்போன் பேசிக்கொண்டு இருந்தார்.இதனை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனம் உடைந்த ஜெயப்பிரியா கதவை தாழிட்டுக்கொண்டு சேலையால் தூக்குப்போட்டுக்கொண்டார். தகவல் அறிந்த வெள்ளகோவில் போலீசார் ஜெயப்பிரியாவை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜெயப்பிரியா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இ்துகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story