அரிசி ஆலை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை


அரிசி ஆலை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
x
திருப்பூர்


காங்கயத்தில் அரிசி ஆலை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

அரிசி ஆலை உரிமையாளர்

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி என்கிற மகேஷ் (வயது 39). இவர் பெரிய இல்லியம் சாலையில் அரிசி ஆலை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை பழனிசாமி தனது வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

மருத்துவமனையில் பழனிசாமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பழனிசாமி குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், இதனால் மனமுடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.


Next Story