கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு; சுற்றுலா சென்ற தலைமை டாக்டர் உள்பட 2 பேர் பணிஇடை நீக்கம்
கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் மகனை சிகிச்சை அளிக்க சொல்லிவிட்டு சுற்றுலா சென்ற தலைமை டாக்டர் உள்பட 2 பேர் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டார்கள்.
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் மகனை சிகிச்சை அளிக்க சொல்லிவிட்டு சுற்றுலா சென்ற தலைமை டாக்டர் உள்பட 2 பேர் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டார்கள்.
தலைமை டாக்டர்
கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் தலைமை டாக்டராக இருப்பவர் தினகர். இங்கு பெண் டாக்டர் சண்முகவடிவு என்பவர் உள்பட 4 உதவி மருத்துவர்கள், நர்சுகள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்தநிலையில் டாக்டர் தினகர் மற்றும் சண்முகவடிவு ஆகியோர் கடந்த ஞாயிறு அன்று சுற்றுலா சென்றதாகவும், மேலும் மருத்துவ பயிற்சி முடித்த தினகரின் மகன் நோயாளிகளுக்கு ஞாயிறு அன்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்ததாகவும் புகார் எழுந்தது. மேலும் இதுபற்றிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.
இணை இயக்குனர் ஆய்வு
இதையடுத்து ஈரோடு மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் கோமதி கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பணியில் இருந்த டாக்டர்கள் மற்றும் பணியாளர்களிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினார்.
அதன்பின்னர் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் கோமதி நிருபர்களிடம் கூறும்போது, 'கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தியுள்ளேன். இதுகுறித்து விசாரணை அறிக்கை மருத்துவத்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்படும்' என்றார்.