மதுரை டாஸ்மாக் பணியாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்
மதுரை டாஸ்மாக் பணியாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மதுரை
திருமங்கலம்,
மதுரை தெற்கு மண்டல டாஸ்மாக் மேலாளராக இருப்பவர், டாஸ்மாக் மது விற்பனையாளர்களிடம் தினமும் லஞ்சம் கொடுக்க வேண்டும். தவறினால் வேலையை விட்டு நீக்கப்படுவீர்கள் என மிரட்டல் விடுப்பதாக கூறி ஒரு வீடியோ வௌியானது. இதனை டாஸ்மாக் கடை மது விற்பனையாளர்களான மாயக்கண்ணன், ராமசாமி, முருகன் ஆகியோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் அழைத்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, உயர் அதிகாரிகள் மீது புகார் அளிக்க வேண்டும் என்றால் கடிதம் மூலமாக மட்டுமே தகவல் தெரிவிக்க வேண்டும். டாஸ்மாக் நிறுவன விதிமுறைகளுக்கு புறம்பாக நடக்கக்கூடாது என்று கண்டித்து, டாஸ்மாக் மண்டல மேலாளர் பற்றி அவதூறு பரப்பியதாக மேற்கண்ட 3 பேரையும் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story