கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த ஏட்டு பணியிடை நீக்கம்


கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த ஏட்டு பணியிடை நீக்கம்
x

வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த தலைமை ஏட்டை பணியிடை நீக்கம் செய்து ஜெயில் சூப்பிரண்டு அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர்

வேலூர்

வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த தலைமை ஏட்டை பணியிடை நீக்கம் செய்து ஜெயில் சூப்பிரண்டு அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார்.

கஞ்சா, செல்போன் பேட்டரி பறிமுதல்

வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் ஜெயிலில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என்று 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயிலில் செல்போன், சிகரெட், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கைதிகள் பயன்படுத்துவதை தடுப்பதற்காக ஜெயில் காவலர்கள் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி ஜெயில் காவலர்கள் திடீரென கைதிகளின் அறைகள் மற்றும் கழிவறைகளில் சோதனை செய்தனர்.

இதில், 7-வது தொகுதியில் உள்ள தண்டனை கைதிகள் அறையில் இருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் செல்போன் பேட்டரி பறிமுதல் செய்யப்பட்டது. ஜெயிலுக்குள் கைதிகள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் அதையும்மீறி கைதிகள் அறையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது ஜெயில் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தலைமை ஏட்டு பணியிடை நீக்கம்

இதுகுறித்து அந்த அறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளிடம் ஜெயில் அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அதில், ஜெயில் தலைமை ஏட்டு விஜயகுமார் என்பவர் கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை வேலூர் மத்திய ஜெயில் சூப்பிரண்டு அப்துல் ரகுமான் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

ஜெயிலில் கஞ்சா, செல்போன் பேட்டரி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து பாகாயம் போலீசில் ஜெயில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமை ஏட்டு விஜயகுமார் ஜெயில் கைதிகளுக்கு இதுவரை கஞ்சா சப்ளை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் ஜெயில் காவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story