ஓய்வு பெறும் நாளில் தாசில்தார் பணியிடை நீக்கம்


ஓய்வு பெறும் நாளில் தாசில்தார் பணியிடை நீக்கம்
x

விதிமுறைகளை மீறி பட்டா வழங்கியதாக வந்த புகாரின் பேரில் ஓய்வு பெறும் நாளில் தாசில்தாரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.

திருவண்ணாமலை

விதிமுறைகளை மீறி பட்டா வழங்கியதாக வந்த புகாரின் பேரில் ஓய்வு பெறும் நாளில் தாசில்தாரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.

பணியிடை நீக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணியாற்றி வந்தவர் மலர்கொடி (வயது 60). இவர் கடந்த 31-ந் தேதி அன்று பணி ஓய்வு பெற இருந்தார்.

இந்த நிலையில் அவர் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

தண்டராம்பட்டு தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் கலெக்டர் முருகேஷ் தணிக்கை மேற்கொண்டார். அப்போது ஒருவர் மனு அளித்தார்.

அதில் அரசு வழங்கிய நிலத்தை முறையாக வருவாய் துறை கணக்கில் பதிவு செய்து தருமாறு கூறி உள்ளார். இதையடுத்து அந்த மனு மீது கலெக்டர் விசாரணை மேற்கொண்டார்.

விதிமுறைகளை மீறி பட்டா

அப்போது தண்டராம்பட்டில் மலர்கொடி தாசில்தாராக பணியாற்றியபோது விதிமுறைகளை மீறி பட்டா வழங்கி உள்ளதும், அதை வருவாய்த்துறை பதிவேடுகள் கணக்கில் பதிவு செய்யவில்லை என்பதும் தெரியவந்தது.

தொடர் விசாரணையின் முடிவில் தாசில்தார் மலர்கொடியை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story