ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் துணை தாசில்தார் பணி இடைநீக்கம் - கலெக்டர் உத்தரவு


ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் துணை தாசில்தார் பணி இடைநீக்கம் - கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 15 Oct 2023 6:45 PM GMT (Updated: 15 Oct 2023 6:46 PM GMT)

கல்குளம் தாலுகா அலுவலகத்தில் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் துணை தாசில்தார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

துணை தாசில்தார்

திங்கள்சந்தை அருகே உள்ள கண்டன்விளை மடவிளாகத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரி. இவருடைய அக்காள் மகன் ராகுல் (வயது 27). இவருக்கு கண்டன்விளையில் 7 சென்ட் நிலம் உள்ளது. இதில் அவர் வீடு கட்டி வருகிறார். அந்த இடம் விவசாய நிலமாக இருப்பதால் வரைபட அனுமதி பெற முடியவில்லை. இதனையடுத்து ராகுல் விவசாய நிலத்தை தரிசு நிலமாக மாற்றித்தர வருவாய்த்துறையிடம் விண்ணப்பம் செய்தார்.

இந்த விண்ணப்ப மனு தொடர்பான விவரத்தை கல்குளம் தாலுகா அலுவலகத்தில் உள்ள துணை தாசில்தார் ருக்மணி (45) விசாரணை நடத்தாமல் கிடப்பில் போட்டுள்ளார். அத்துடன் விண்ணப்பத்துக்கு உரிய தீர்வு காண வேண்டும் எனில் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என ஜெகதீஸ்வரிடம் கேட்டுள்ளார்.

கையும், களவுமாக...

ஆனால் லஞ்சம் கொடுக்க மனமில்லாத ஜெகதீஸ்வரி இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்தார். தொடர்ந்து அவர்களின் ஆலோசனை படி ஜெகதீஸ்வரி ரூ.25 ஆயிரம் மதிப்பிலான நோட்டுகளை துணை தாசில்தார் ருக்மணியிடம் கொடுத்த போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இந்தநிலையில் துணை தாசில்தார் ருக்மணியை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் ஸ்ரீதர் ஆணை பிறப்பித்துள்ளார்.


Next Story