போலீஸ்காரர் பணி இடைநீக்கம்


போலீஸ்காரர் பணி இடைநீக்கம்
x

முதல்-அமைச்சர் குறித்து அவதூறு பரப்பிய போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

முதல்-அமைச்சர் குறித்து அவதூறு பரப்பிய போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

முகநூலில் அவதூறு

நெல்லை மாவட்டம் களக்காடு போலீஸ் நிலையத்தில் முதல்நிலை போலீஸ்காரராக பணியாற்றியவர் பெருமாள் (வயது 35).

இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை அரசு ஆஸ்பத்திாியில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்த புகைப்படத்தை எடிட் செய்து, முதல்-அமைச்சர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் நெல்லை பெருமாள் என்ற தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பணியிடை நீக்கம்

இதனை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் விசாரணை நடத்தினார். தொடர்ந்து முதல்நிலை காவலர் பெருமாளை பணியிடை நீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டார்.

இதற்கிடையே, தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா மற்றும் நிர்வாகிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகத்திடம், முதல்-அமைச்சர் குறித்து முகநூலில் அவதூறு பரப்பிய போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.


Next Story